புரட்டி பார்க்கிறேன் கடந்து போன வருடத்தை சில பக்கங்களில் சிறகடித்த வருடல்கள் சில பக்கங்களில் சிதறடித்த நெருடல்கள் பல பக்கங்களில் பக்குவப்படுத்திய பாடங்கள் வருடல்களின் வசந்தத்தை இறகாக்கி சிறகடிக்கிறேன் தன்னம்பிக்கையுடனும்,புத்துணர்வுடனும் புதிய அத்தியாயத்தை இயற்ற….......இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .புனிதா.
மணலில் புதைந்த
கால் சுவடுகளாய்
மறைந்து போன
நாட்கள் !
அலைகள் விட்டுச் சென்ற
வெண்ணுரையாய் அடங்கிப் போன
நிகழ்வுகள் !
விண்ணின் எரிக்கல்லாய்
விரைந்தமிழ்ந்த காலங்கள்!
நினைவுகள் மட்டும் இங்கே
செம்புல நீராய் !
கடந்து போன காலங்களில்
கரைந்து போன நிகழ்வுகள்
நடந்து போவோம்
துளிர்த்து நிற்கும்
புத்தாண்டின் கண் !
இப்புத்தாண்டில் ,
விசும்பின் கண் ஒளிரும்
விண்மீன் போல்
மண்ணில் ஒளிரட்டும்
தமிழின் மேன்மை ! பிரதீபா பிரேம்
தமிழரின் தமரகங்கள்
தாகம் கொள்ளட்டும்
தமிழுக்காய் !
தரணி எங்கும்
தெறிக்க உரைப்போம்
தமிழே நம் மூச்சென !
தமிழே உலகில் மூப்பென !
தமிழே தலை மொழி என!
மண்ணில் பிறந்தோம்
மற்றான் போல் மரிப்பதற்கா?
அல்ல -தமிழ்
மண்ணின் மானம்
காப்பதற்கு
மறைந்த நம்மை
மீட்பதர்க்கு !
கலைந்துப் போன
முகில்களுக்காய்
காத்திராத வானம் போல் !
காய்ந்துதிர்ந்த சிறகுகளுக்காய்
மாய்ந்து போகா மரங்கள் போல !
கடந்து வந்த தடங்கல்களை
தாண்டி ஓடும் ஆற்றைப் போல !
எழுந்து நிற்போம்
எதிர்காலம் நோக்கி
வாழ்ந்து பார்ப்போம்
வையகம் ஏற்ற !
தமிழராய் வாழ்வோம்
தரணியை வெல்வோம் !
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
தமிழை நேசிப்போம் !
தமிழை சுவாசிப்போம் !
-பிரதீபா பிரேம். உங்களது கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி:leeraj2002@gmail. Com. You can also listen: APPLE PODCAST https://podcasts.apple.com/us/podcast/bharath-podcast/id1477269297. Anchor app: https://anchor.fm/leema-arockiaraj Google app: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy9kOTg3ZWE0L3BvZGNhc3QvcnNz. SPOTIFY App: https://open.spotify.com/show/2iw7X7jfmSrFFtJAOwHpNx. Breaker App: https://www.breaker.audio/bharath-podcast. Pocket casts :https://pca.st/iglsHd. Radio public : https://radiopublic.com/bharath-podcast-6vrv3Q
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/bharath-tamil-podcast/support)